ரூ.11.63 லட்சம் தங்க கட்டிகள் பறிமுதல் – திருச்சி விமானநிலையம்

திருச்சி விமான நிலையத்தில் பதினொன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள 300 கிராம் கடத்தல் தங்கக்கட்டிகள் பிடிபட்டன.

நேற்று இரவு மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஏர் ஆசியா விமான பயணிகளிடம் திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது மயிலாடுதுறையை சேர்ந்த முகமது அப்துல் நாசர் என்பவர் தனது ஆசனவாயில் 300 கிராம் எடை கொண்ட மூன்று தங்க கட்டிகளை மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளின் மதிப்பு 11 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் ஆகும்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே