ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் அமைச்சர் ஆய்வு

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரவு ஒரு மணி அளவில் ஆய்வு செய்தார்.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் வார்டுகளை ஆய்வு செய்த அமைச்சர் அங்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அதேபோல் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்ற அவர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை பார்வையிட்டார்.

டெல்லியில் மத்திய அமைச்சர்களை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அவர், நேராக மருத்துவமனைகளுக்குச் சென்று இந்த ஆய்வை மேற்கொண்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே