ரத்த தானம் செய்ய மக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் – முதலமைச்சர் பழனிசாமி

ரத்த தானம் செய்ய பொதுமக்கள் பெருமளவில் முன்வர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரத்த தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் நாள் தேசிய தன்னார்வ
ரத்த தான நாளாக கடைபிடிக்கப்படுகிறது.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தன்னார்வ ரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திட, பொதுமக்கள் பெருமளவில் இரத்த தானம் செய்திட முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

கடந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகள் மூலம் 9 லட்சத்து 16 ஆயிரத்து 929 அலகுகள் இரத்தம் சேகரிக்கப்பட்டு, தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்கி வருவதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில், மாவட்டந்தோறும் மீம்ஸ் போட்டி நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும் தனது அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே