ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்று ரிசர்வ் வங்கியின் வாரிய இயக்குநர்களில் ஒருவரான ஆடிட்டர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய சிட்பண்ட் சங்கத்தின் ஆண்டு பொதுக்கூட்டம் சென்னை ஆயிரம் விளக்கில் நடைபெற்றது.
இதில் ஆடிட்டர் குருமூர்த்தி கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும் என்றும், அரசியலில் முழுவீச்சில் ஈடுபட வேண்டும் என்பதே தனது கருத்து எனவும் தெரிவித்தார்.