மொஹரம் தினத்தை முன்னிட்டு ஷியா பிரிவினர் துக்க ஊர்வலம்

மேலூரில் மொஹரம் தினத்தை முன்னிட்டு ஷியா பிரிவை சேர்ந்த இசுலாமியர்கள் மார்பில் அடித்துக்கொண்டு கத்தி போன்ற ஆயுதங்களால் கொண்டும் ஊர்வலம் சென்றனர்.

முஹம்மது நபியின் பேரனாகிய இமானு ஹுசைன் கொல்லப்பட்ட தினத்தை ஷியா பிரிவு முஸ்லிம்கள் துக்க தினமாக அனுசரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் மேலூர் சைதாப்பேட்டையில் உள்ள மசூதியில் இருந்து ஏராளமானவர்கள் மார்பில் அடித்துக்கொண்டும் ஆயுதங்களால் கீறிக்கொண்டும் சோகப் பாடலை இசைத்துக் கொண்டும் ஊர்வலமாக சென்றனர்.

முக்கிய வீதிகளின் வழியாக இந்த ஊர்வலம் சென்றது. திரளான இசுலாமியர்கள் கருப்புச்சட்டை அணிந்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே