முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பி.என்.யுகாந்தர் காலமானார்

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், மைக்ரோசாஃப்ட் சி.இ.ஓ.வின் தந்தையுமான பி.என்.யுகாந்தர் காலமானார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பன்ஜாரா ஹில்ஸ் எனும் பகுதியை சேர்ந்தவர் பி.என்.யுகாந்தர். 80 வயதான இவர், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பணியாற்றியதோடு, முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சி காலத்தில் மத்திய அரசின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை கவனித்துள்ளார். 

இவரது மகன் சத்யானந்தா நாதெல்லா மைக்ரோ சாப்ட் நிறுவனத்தில் சிஇஓ-வாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், பி.என்.யுகாந்தர் நேற்று அவரது இல்லத்தில் காலமானார்.

பி.என்.யுகாந்தர் மறைவுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கைய நாயுடு, அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதில், மறைந்த பி.என்.யுகாந்தர், எளிமையின் அடையாளம் என்றும் உண்மை மற்றும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் என்றும் அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே