முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளிநாடு பயணம்…

தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையிலிருந்து இன்று லண்டன் புறப்பட்டுச் செல்லும் அவர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ மேம்பாடு குறித்த பணிகளை கண்டறிந்து அதனை தமிழகத்தில் செயல்படுத்தும் வகையில் சர்வதேச மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இங்கிலாந்தின் அவசர ஆம்புலன்ஸ் சேவை மற்றும் சக்போல்ஸ் நகரில் உள்ள ஐ பி ஸ்விட்ச் ஸ்மார்ட் கிரிட் நிறுவனத்தை பார்வையிடுகிறார். தொடர்ந்து இந்துஜா உள்ளிட்ட தொழில் அதிபர்களையும், இங்கிலாந்து எம்.பி.க்களையும் முதலமைச்சர் சந்தித்து பேசவுள்ளார்.

வருகிற ஒன்றாம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் செல்லும் முதலமைச்சர் எடப்பாடிபழனிசாமி இரண்டாம் தேதி பப்ஃபல்லோ நகரில் அமெரிக்க தமிழ் தொழில் முனைவோர் கூட்டமைப்பினர் மற்றும் அமெரிக்க தொழில் முனைவோர் பிரதிநிதிகளை சந்திக்கிறார்.

மூன்றாம் தேதி நியூயார்க் நகருக்கு திரும்பும் முதலமைச்சர் அங்கு தமிழ் முனைவோர் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

இதையடுத்து நான்காம் தேதி சான்பிரான்சிஸ்கோ செல்லும் முதலமைச்சர் அங்குள்ள ப்ளூம் எனர்ஜி நிறுவனத்தை பார்வையிடுகிறார்.

ஐந்தாம் தேதி டெஸ்லா, இ .வி ஃபேக்டரி உள்ளிட்ட நிறுவனங்களை பார்வையிட உள்ளார்.

ஏழாம் தேதி அங்கிருந்து புறப்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்கள் துபாயில் தொழில்முனைவோரை சந்திக்கும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பத்தாம் தேதி அவர் தமிழகம் திரும்புகிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே