மீண்டும் யாரும் போகாத பாதையில் பார்த்திபன்.! – விவேக்

மீண்டும் யாரும் போகாத புதிய பாதைக்கு பார்த்திபன் சென்றுள்ளதாக நடிகர் விவேக் பாராட்டி உள்ளார்.

ஒத்த செருப்பு படத்தில் தனி ஒருவராக நடித்துள்ள பார்த்திபனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

பார்த்திபனை பாராட்டி ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள நடிகர் விவேக், “ஒற்றை நெற்றியில் வெற்றித் திலகம்” எனப் புகழ்ந்துள்ளார்.

மேலும் ஒத்த செருப்பு படத்திற்காக கற்றை ரோஜாக்களை பார்த்திபன் கைகளில் தரவேண்டும் எனவும் நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே