3ம் வகுப்பு மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியர் கைது

மயிலாடுதுறை அருகே படிக்கவில்லை என்பதற்காக மாற்றுத்திறனாளி மாணவியை கத்தியால் குத்திய ஆசிரியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை கீழையூரைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மகள் பவித்ரா. 8 வயதான இவர், இரண்டு கைகளிலும் விரல்கள் இல்லாத மாற்றுத்திறனாளி. பவித்ரா அப்பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்த நிலையில் பவித்ரா சரியா படிக்காததால் ஆத்திரமடைந்த ஆசிரியர் பாஸ்கர் கத்தியால் பவித்ராவின் கையில் குத்தியுள்ளார். காயமடைந்த மாணவி மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதையடுத்து புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பாஸ்கரை கைது செய்தனர். மாற்றுத்திறனாளி மாணவியை ஆசிரியர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே