மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.16 அதிகரிப்பு

மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 16 ரூபாய் அதிகரித்துள்ளது.

சென்னையில் 14.2 கிலோ எடைகொண்ட மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டர் 16 ரூபாய் விலை உயர்ந்து 606 ரூபாய் 50 காசாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விலை செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

மானியமற்ற சிலிண்டரின் விலை கடந்த மாதம் 6 ரூபாய் குறைக்கப்பட்டு 590 ரூபாய் 50 காசுகளுக்கு விற்கப்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தின் இணையதளத்தில் மானியத்துடன் கூடிய சிலிண்டரின் விலை பற்றிய தகவல்கள் கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் குறிப்பிடப்படவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே