மகாத்மா காந்தியடிகளின் 150 வது பிறந்த தினம்..!

மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று கொண்டாப்பட்டு வருகிறது.

மகாத்மாவின் தீர்க்கதரிசனம் மற்றும் செயல்கள் ஒவ்வொரு இந்திய குடிமக்களின் தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியமும் அகிம்சையும் மகாத்மா காந்தி உலகளாவிய மனித குலத்திற்கு வழங்கிய நன்கொடை என்றும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி இன்று மாலை குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள காந்திஜியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்கிறார்.

காந்தி சிலைக்கு மாலை அணிவித்து தூய்மை இந்தியா திட்டத்தில் பங்கேற்கும் பிரதமர் மோடி, பொதுக்கூட்டத்திலும் உரை நிகழ்த்த உள்ளார். அகமதாபாத் நவராத்திரி கொண்டாட்டங்களிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

ஒடிசா அரசு புவனேசுவரில் மகாத்மா காந்தியடிகளின் வாழ்க்கையை சித்தரிக்கும் புகைப்படக் கண்காட்சியை நடத்தி வருகிறது.

இதில் காந்தீய சிந்தனைகளை பிரதிபலிக்கும் பல்வேறு அரிய கருத்துகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

ஹைதராபாத்தில் மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மகாத்மா காந்தி பேருந்து நிலையத்தில் புகைப்படக் காட்சி நடைபெறுகிறது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசிக்கின்றனர்.

விஜயவாடாவிலும் மகாத்மா காந்தியின் சிற்பங்கள், சித்திரங்கள், மற்றும் புகைப்படங்கள் அடங்கிய கண்காட்சி நடைபெறுகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே