தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பிரஜார் தர்பார் என்ற பெயரில் பொதுமக்களின் குறைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், இது அம்மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் இவ்விவகாரத்தை மிகவும் கவனமாக கையாள தெலுங்கானாவை ஆளும் கட்சியானா டிஆர்எஸ் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. ஆளுநர் பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்க சட்டத்தில் விதிமுறைகள் இருக்கும் பட்சத்தில் அதை தாங்கள் எதிர்க்க மாட்டோம் என அக்கட்சியின் மேலவை பல்லா ராஜேஸ்வர ரெட்டி கூறியுள்ளார்.
முன்னதாக தெலுங்கானாவில் ஆளுநர் வாரம் ஒருமுறை பொதுமக்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்கலாம் என்று அம்மாநில கட்சி ஒன்றின் செய்தி தொடர்பாளர் கூறியிருந்தார்.
இதுபோன்ற திட்டம் பரிசீலனையில் இருப்பதாக தமிழிசை தமது ட்விட்டர் பதிவில் கூறியிருந்தார். புதுச்சேரி, டெல்லி போன்ற மாநிலங்களில் அதிகாரம் வரம்பு குறித்து ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் கடும் கருத்துவேறுபாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.