பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலரை கைது செய்யாவிட்டால், வழக்கு தொடருவேன் : டிராபிக் ராமசாமி

சுபஸ்ரீ மரணத்தில் லாரி ஓட்டுனரை கைது செய்த காவல்துறை, பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலரை ஏன் கைது செய்யவில்லை?? என சமூக செயல்பாட்டாளர் டிராபிக் ராமசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் கேட்ட கேள்விகள் நியாயமானது என்று கூறினார்.

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான முன்னாள் கவுன்சிலரை கைது செய்யாவிட்டால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மீது மாநகராட்சி நிர்வாகம் மீதும் வழக்கு தொடருவேன் என்றும் டிராபிக் ராமசாமி தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே