பெற்ற தாயை காலணியால் அடித்த மகனுக்கு நூதன தண்டனை

பெற்ற தாயை செருப்பால் அடித்த மகனுக்கு அபராதமாக முதியோர் இல்லத்திற்கு பத்தாயிரம் ரூபாய் வழங்குமாறு நீதிமன்றம் வித்தியாசமான தீர்ப்பு அளித்துள்ளது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஸ்ரீலதா என்பவர் காவல்நிலையத்தில் வழக்கு ஒன்று கொடுத்துள்ளார். இதில் சொத்து தகராறு காரணமாக தனது மூத்த மகன் ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவி இருவரும் தன்னை செருப்பால் அடித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியிருந்தார். இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு ஸ்ரீதரும் அவரது மனைவியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ஸ்ரீதர் மற்றும் அவரது மனைவிக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். எனினும் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் முதியோர் இல்லத்துக்கு அக்டோபர் 4 ஆம் தேதிக்குள் பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டார்.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 409 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே