பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குமரிக் கடல், தென் தமிழக கடலோரம், மாலத்தீவு பகுதிகளில் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நடப்பு பருவத்தில் 15 விழுக்காடு கூடுதல் மழைப் பொழிவை தமிழகம் பெற்றிருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே