பெண்ணின் காதைக் கடித்து குதறிய ராட்வீலர் நாய்

உரிமையாளருடன் சாலையில் நடந்து சென்ற ராட்வீலர் ரக நாயை கொஞ்ச முயற்சித்த பெண் காதை இழந்து செவித்திறன் பாதிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த 28 வயது இளம்பெண் பார்க்கில் உரிமையாளருடன் வாக்கிங் சென்ற ராட்வீலர் நாயை கொஞ்ச முயற்சித்தார். உரிமையாளரிடம் அனுமதி பெற்று ராட்வீலர் நாயை தொட்ட அடுத்த வினாடி அது தன்மீது பாய்ந்து காதை கடித்து குதறியதாக தெரிவித்துள்ளார். ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அந்த பெண் காதில் பெரும்பாலான பாகத்தை இழந்ததோடு செவித் திறனும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

3 குழந்தைகளின் தாயான அவர் தன் மகனை பார்த்து பயப்படும் சூழலுக்கு ஆளாகிவிட்டதாகவும் கூறி வேதனை தெரிவித்துள்ளார். தப்பி ஓடிய நாய் மற்றும் நாயின் உரிமையாளர்களை போலீசார் புகைப்படம் வெளியிட்டு தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே