புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் கலைவிழா கோலாகலம்

புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்று வரும் கலை விழாவில் மாணவ மாணவியரின் கண்கவர் ஆடை அலங்கார வண்ண நிகழ்ச்சியினை பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர்.

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் கடந்த 4 நாட்களாக மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளிடையே கலை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஜிப்மர் வளாகத்தில் நடைபெற்ற பேஷன் ஷோ, ஆடை அலங்கார அணிவகுப்பில் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகள் வண்ண வண்ண உடைகள், அலங்கார முக மூச்சிகளுடனும் அணிவகுத்தனர்.

இயந்திர பயன்பாடு, நவீன உடை, நீர் மேலாண்மை, பிளாஸ்டிக் தவிர்த்தல் ஆகியவற்றில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே