புதிதாக திறக்கப்பட்ட டக்ஸிங் விமான நிலையத்துக்கு வந்த முதல் விமானம்

சீனாவில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நட்சத்திர மீன் வடிவிலான விமான நிலையத்தில், பயணிகள் சேவையை துவக்கும் விதமாக முதல் விமானம் கொண்டு வரப்பட்டது.

தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன் பெய்ஜிங்கில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள டக்ஸிங் சர்வதேச விமான நிலையத்தை, நேற்று சீன அதிபர் ஜி. ஜின்பிங் திறந்து வைத்தார்.

இந்தநிலையில், பயணிகள் விமான சேவையை துவக்கும் விதமாக, இன்று காலை விமான நிலையத்துக்கு ‘சீனா யுனைட்டட் ஏர்லைன்ஸ்’ என்ற விமான நிறுவனத்துக்கு சொந்தமான மிகப்பெரிய விமானம் கொண்டு வரப்பட்டது.

இதனை விமானி சாதுர்யமாக இயக்கி, விமான ஓடுதளம் வழியாக வெற்றிகரமாக தரையிறக்கினார்.

குறைந்த டிக்கெட் கட்டணம் கொண்ட இந்த விமானம், டக்ஸிங் விமான நிலையத்திலிருந்து தனது சேவையை தொடங்கவுள்ள நிலையில், பலரும் அதில் பயணிக்க ஆர்வம் தெரிவித்து விமான நிலையத்தை தொடர்பு கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே