பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக 16 வயது சிறுவன் கைது

சென்னை தாம்பரம் அருகே வீடு அருகே விளையாடிக்கொண்டிருந்த 4 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

புது நல்லூரில் வீட்டின் அருகே 4 வயது சிறுமி ஒருவர் விளையாடிக்கொண்டிருந்ததாகவும், பக்கத்து வீட்டை சேர்ந்த 16 வயது சிறுவன் அந்த சிறுமியை வீட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

சிறுமியின் அழுகுரல் கேட்டு அவரது தாயார் வந்து பார்த்து, சிறுமியை மீட்டு சென்றுள்ளார். தொடர்ந்து சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த அவரது தாயார், இதுகுறித்து சோமங்கலம் போலீசாரிடம் புகார் அளிக்க சிறுவனை கைது செய்து விசாரித்த அவர்கள், மேல் விசாரணைக்காக ஸ்ரீபெரும்புதூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே