பாடத்திட்டத்தில் பகவத் கீதை இடம்பெற்ற விவகாரம் – இந்திய கல்விக் குழு தலைவர் விளக்கம்

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

அண்ணா பல்கலைக்கழக பாடதிட்டத்தில் பகவத் கீதை சம்பந்தப்பட்ட பாடம் மட்டும் இடம்பெற்றதற்கு, குர் ஆன், பைபிள் போன்றவற்றை நடத்தக்கூடிய பேராசிரியர்கள் இல்லாததே காரணமாக இருந்திருக்கலாம் என அகில இந்திய கல்விக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடியில் நடைபெற்ற ஹேக்கதான் 2019 என்ற நிகழ்ச்சியில் அகில இந்திய கல்விக் குழுவின் தலைவர் சஹஸ்ரபுத்தே கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணா பல்கலைக்கழகத்தின் பி.டெக் இரண்டாம் ஆண்டு பாடத்திட்டத்தில் பகவத் கீதை சம்பந்தமான பாடங்கள் சேர்க்கப்பட்டது குறித்து விளக்கமளித்தார்.

பொறியியல் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த பாடங்களை மட்டும் படித்தால் போதாது எனக் கூறிய அவர், அதனையும் தாண்டி தத்துவவியல், மனோதத்துவம், பொருளாதாரம், சமூகவியல், அரசியலமைப்பு, மேலாண்மை ஆகியவற்றை பற்றியும் அடிப்படை புரிதலோடாவது இருக்க வேண்டும் எனக் கூறினார்.

இந்த அடிப்படையில்தான் பி.டெக் மாணவர்களுக்கு தத்துவவியல் பாடம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், அவை விருப்பப் பாடங்களேயன்றி கட்டாயப் பாடங்கள் அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

Cloud7 Kitchen Chennai | Coimbatore
Complete Home Interiors Solutions..
MODULAR KITCHEN | WARDROBE | EXQUISITE FURNITURE.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே