பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பிரியாணி சாப்பிடக்கூடாது

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் பிரியாணி சாப்பிடக்கூடாது என அணியின் பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும், தேர்வு குழு தலைவராகவும் அண்மையில் பதவியேற்ற மிஸ்பா உல் ஹக், அணியை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

அதன் ஒரு பகுதியாக வீரர்களின் உணவு விவகாரத்தில் கை வைத்துள்ள அவர், எண்ணெய்யால் செய்யப்பட்ட இறைச்சி உணவுகள் மற்றும் இனிப்பு பதார்த்தங்களை வீரர்கள் அறவே தொடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முக்கியமாக, அணி வீரர்கள் யாரும் பிரியாணி உணவு உட்கொள்ளக்கூடாது என அவர் கட்டளையிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

உலகக்கோப்பை தொடரில் இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி, அந்த போட்டிக்கு முன்பாக பீட்சா, பர்கர் என சாப்பிட்டதாகவும், அதனாலேயே இந்தியாவிடம் தோற்றதாகவும் கூறி சமூக வலைதளங்களில் விமர்சன வீடியோ பரவி இருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே