அமேஸான் மற்றும் பிளிப்கார்ட் நிறுவனங்கள் பண்டிகை சலுகை விற்பனையில் சாதனை படைத்துள்ளன.
ஆன்லைன் விற்பனையில் முன்னணியில் உள்ள அமேஸான் நிறுவனம் தனது பண்டிகைக் கால விற்பனையை கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
விற்பனை அறிவிக்கப்பட்ட 36 மணி நேரத்திற்குள் சுமார் 750 கோடி ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்கள் விற்பனையாகி உள்ளன.
இந்த நிறுவனத்தில் கடந்த ஆண்டை விட பேஷன் பொருட்கள் 5 மடங்கு அதிகமாகவும், அழகு சாதனப் பொருட்கள் 7 மடங்கும், மளிகைப் பொருட்கள் 3 புள்ளி 5 மடங்கு அதிகமாகவும் விற்பனையானதாக அமேஸான் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல் அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்மார்ட்டின் ஆதரவுடன் செயல்படும் பிளிப்கார்ட் நிறுவனம் தங்களது தளத்தில் கடந்த ஆண்டை விட நடப்பாண்டு இருமடங்கு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்களும் இந்த பண்டிகை காலங்களில் 5 பில்லியன் டாலர் மதிப்புள்ள விற்பனையை ஈட்டக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.