சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் சிறப்பு ஆசிரியர்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் உடற்கல்வி, தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட பாடங்களுக்கான 1325 ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு 2017-ல் தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவுகள் 2018 அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தேர்வு முடிவு வெளியாகி ஓராண்டு ஆகியும் கலந்தாய்வுகள் நடத்தி பணி நியமன ஆணைகள் வழங்கப்பட வில்லை என சிறப்பு ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர், பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.