இனி திரைபடங்களின் வசூலை வைத்துதான் நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படும், என தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜே.எஸ்.கே சதீஷ் வெளியிட்டுள்ள வீடியோ பதிவுவில் ‘திரையரங்களில் வரும் நாட்களில் ஆன்லைனில் மட்டுமே டிக்கெட் எடுக்கும் முறை விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாகவும் அதற்கான பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருவதாக’வும் தெரிவித்துள்ளார்.
திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் ஆன்லைன் முறை நடைமுறைக்கு வந்தபிறகு அந்த படத்தின் லாபத்தை வைத்துதான் அனைவருக்கும் சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று ஜே.எஸ்.கே சதீஷ் குறிப்பிட்டுள்ளார்.