நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 11 செண்டி மீட்டர், நடுவட்டத்தில் 7 செண்டி மீட்டர், கோவை மாவட்டம் வால்பாறையில் ஒரு செண்டி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.