நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்

சென்னையைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த உதித்சூர்யா என்ற மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்ந்ததாக எழுந்த புகார் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

உதித் சூர்யா குடும்பத்துடன் தலைமறைவாகவுள்ள நிலையில், அவரது உறவினர்கள், நண்பர்கள், கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மோசடி குறித்து விசாரித்த பேராசிரியர் குழு உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தமிழகம் முழுவதுமுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் நடப்பாண்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆள்மாறாட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே