நிலாவின் மேற்பரப்பை புகைப்படம் எடுத்தது சந்திரயான்-2

நிலாவின் மேற்பரப்பை சந்திரயான்-2 விண்கலம் மீண்டும் ஒருமுறை படம் எடுத்துள்ளது.

நிலாவிலிருந்து 4 ஆயிரத்து 375 கிலோ மீட்டர் உயரத்தில் பறந்தபோது அந்த விண்கலம் எடுத்த படத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கடந்த 23ஆம் தேதியன்று சந்திரயான்-2 எடுத்து அந்த படத்தில் நிலாவில் உள்ள பெரும் புள்ளிகள் தெளிவாகத் தெரிவதாக இஸ்ரோ கூறியுள்ளது. நிலாவின் சுற்றுவட்ட பாதையில் கடந்த 20ஆம் தேதி நுழைந்த சந்திரயான்-2 21ஆம் தேதியன்று நிலாவின் மேற்பரப்பை படம் பிடித்து அனுப்பியது. இதேபோல இப்போது இரண்டாவது படத்தையும் அந்த விண்கலம் எடுத்து அனுப்பி உள்ளது.

சந்திரயான்-2 விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை படிப்படியாக குறைத்து செப்டம்பர் மாதம் 2ஆம் தேதியன்று நிலாவில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் வகையில் நிலைநிறுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுக்க உள்ளது. மேலும் இரண்டாம் தேதியன்று சந்திரயான்-2 இல் இருந்து பிரியும் விக்ரம் விண்கலம் செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நிலாவில் தரை இறங்கும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே