நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்வு

பெட்ரோல் விலை கிடுகிடுவென உயர்ந்து மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் ஒரு லிட்டர்  80 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் குறைந்தபட்சமாக பெட்ரோல் ஒரு லிட்டர் 74 ரூபாய் 34 காசுகளுக்கு விற்பனையாகிறது.

இதே போல் சென்னை, கொல்கத்தா, நொய்டா, உள்ளிட்ட அனைத்து முக்கிய நகரங்களிலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. புதன்கிழமை தவிர்த்து தொடர்ந்து 10வது நாளாக விலை உயர்ந்துள்ளது.

மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 80 ரூபாயாகவும், டீசல் விலை 11 காசுகள் அதிகரித்து 70 ரூபாய் 55 காசுகளாகவும் உள்ளது.

டெல்லியில் பெட்ரோல் ஒரு லிட்டர் 74 ரூபாய் 34 காசுகளாக அதிகரித்துள்ள நிலையில், டீசல் விலையில் மாற்றமின்றி 67 ரூபாய் 14 காசுகளாக உள்ளது.

சென்னையை பொறுத்த வரை ஒரு லிட்டர் பெட்ரோல் 77 ரூபாய் 28 காசுகளுக்கும், டீசல் 71 ரூபாய் 09 காசுகளுக்கும் விற்பனையாகிறது.

நொய்டாவில் வியாழனன்று 75 ரூபாய் 66 காசுகளாக இருந்த பெட்ரோல் விலை வெள்ளிக்கிழமை 75 ரூபாய் 77 காசுகளாக அதிகரித்துள்ளது.

அதே போல் வியாழனன்று 67 ரூபாய் 46 காசுகளாக இருந்த டீசல் விலை, தற்போது 67 ரூபாய் 56 காசுகளாக உள்ளது.

கொல்கத்தாவில் பெட்ரோல் விலை 77 ரூபாய் 03 காசுகளாகவும், டீசல் விலை 69 ரூபாய் 66 காசுகளாகவும் உள்ளது.

சவுதி அரேபியாவின் பிரதான எண்ணெய் ஆலைகள் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதல்களால், அந்நாட்டின் எண்ணெய் உற்பத்தி 60 சதவீதம் அளவுக்கு பாதிக்கப்பட்டது.

அதன் தாக்கத்தால் சர்வதேச சந்தைகளில் எண்ணெய் விலை அதிகரித்ததன் காரணமாகவே, பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே