நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் 59 பேர் மனுத் தாக்கல்

மூன்று தொகுதிகளில் இடைத்தேர்தல்…..!!!

நெல்லை மாவட்டம்

  • நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன்,
  • காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் ஆகியோர் தங்கள் வேட்புமனுக்களை தேர்தல் நடத்தும் அதிகாரி நடேசனிடம் நேற்று தாக்கல் செய்தனர். 

விழுப்புரம் மாவட்டம்

  • விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ்செல்வன்,
  • தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் தாக்கல் செய்தனர்.

புதுச்சேரி காமராஜ் நகர்

  • சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரும்,
  • என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனும் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 

வேட்பு மனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் நாங்குநேரி தொகுதியில் 36 பேரும், விக்கிரவாண்டி தொகுதியில் 23 பேரும், புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் 6 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தொகுதிகளில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது.

3-ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

வாக்குப் பதிவு வருகிற 21-ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24-ம் தேதியும் நடைபெற உள்ளன.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே