நயன்தாராவின் 65 வது படத்தின் போஸ்டரை வெளியிட்ட விக்னேஷ் சிவன்

நயன்தாரா நடிக்கும் 65 ஆவது படத்தின் போஸ்டரை இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்டுள்ளார்.

நயன்தாரா நடிக்கும் 65 ஆவது படத்திற்கு நெற்றிக்கண் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிலிந்த் ராவ் இயக்க உள்ள அந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்குகிறது.

இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் போஸ்டரை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான நெற்றிக்கண் படத்தின் பெயரை வழங்கியதற்கு தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே