நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு

மிரட்டல் விடுப்பதாக தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் நடிகை மீரா மிதுன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்றவரும் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஆன நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிரபலமானவர். அவர் மாடல்லிங் துறையைச் சேர்ந்த தொழிலதிபரான ஜோ மைக்கல் பிரவீண் என்பவருடன் முகநூல் வழியாக அறிமுகமான நிலையில் இருவரும் 2017 ஆம் ஆண்டு முதல் நண்பர்களாக பழகி வந்துள்ளனர். பண பிரச்சனை உள்ளிட்ட காரணங்களால் இருவரும் பிரிந்து விட்ட நிலையில் மீராமிதுன் தொழில் அதிபர் ஜோ மைக்கல் பிரவீனுக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன் மீதும் தனது குடும்பத்தினர் மீதும் தாக்குதல் நடத்த மீரா மிதுன் திட்டமிட்டு உள்ளதாகக் கூறி ஜோ மைக்கேல் பிரவீன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகார் தற்போது எழும்பூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகை மீரா மிதுன்மீது ஆபாசமாக பேசுதல் மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே