நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த மெர்சல் திரைப்படம் கடும் நஷ்டத்தை சந்தித்தது என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கருத்து தெரிவித்திருந்தார். இதே கருத்தை பிரபல சினிமா தயாரிப்பாளர் T.சிவாவும் ஆமோதித்தார்.
இந்நிலையில் டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் #FakeBOFraudVIJAY என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதுதொடர்பாக திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
மெர்சல் திரைப்படத்தின் விளம்பரத்திற்காக தான் அதிகமான வசூல் ஆனதாக விளம்பரம் செய்தோம் என்றும் மெர்சல் திரைப்படம் வசூல்ரீதியாக ஒரு தோல்வி படம் என்று குறிப்பிட்டார். மேலும் ஆன்லைன் மூலமாக இனிமேல் எல்லாப் பகுதிகளிலும் டிக்கெட் புக் செய்தால் உண்மையான வசூல் நிலவரம் வெளிப்படையாக தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
இயக்குனர் அட்லீ மீது T.சிவா குற்றசாட்டு :
மெர்சல் திரைப்படம் திட்டமிடப்பட்ட பட்ஜெட்டைவிட அதிகமாக இருந்ததாகவும், இதற்கு இயக்குனர் அட்லியின் திறமையின்மை தான் காரணம் என்று தயாரிப்பாளர் T.சிவா குற்றம் சாட்டி இருக்கிறார்.
மெர்சல் திரைப்படம் வெளியான இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த சர்ச்சை வெடித்து இருப்பது சினிமா உலகில் குறிப்பாக விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.