“நடிகர் ரஜினிகாந்த் தமிழக முதல்வராவார்” – எஸ்.வி சேகர்

நடிகர் ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்பார் என தெரிவித்துள்ளார் நடிகர் எஸ்.வி சேகர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அடையாற்றில் உள்ள அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், சிவாஜிக்கு மலர் தூவி மரியாதை செலுத்த நடிகர் சங்கத்தில் இருந்து யாரும் வராதது வருத்தம் அளிப்பதாக கூறினார். இதுக்கு நடிகர் விஷால் தான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார். பல கருத்துக்களை விடுபவர்கள் ஒன்றாக சேரும் போது, ஒரே கருத்துள்ள ரஜினி மற்றும் பாஜகவில் இணைய கூடாதா என கேள்வி எழுப்பினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே