தொழிலாளர்களுக்கான PF வட்டி விகிதம் உயர்வு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 55 சதவீத்தில் இருந்து 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார், 2018 – 19-ஆம் நிதியாண்டில் 6 கோடி தொழிலாளர்களின் பெயரில் முதலீடு செய்யப்பட்டிருந்த வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், பண்டிகைக் காலத்தில் இது தொழிலாளர்களுக்கு நல்ல செய்தி என்றும் தெரிவித்தார்.

2017 – 18-ஆம் நிதியாண்டில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.55 சதவீதமாக இருந்த நிலையில் அதனை உயர்த்துவது தொடர்பான திட்ட வரைவு மத்திய நிதியமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் வட்டி விகிதத்தை 8 புள்ளி 65 சதவீதமாக உயர்த்துவதற்கு ஊழியர் வருங்கால வைப்பு நிதி தொடர்பாக முடிவெடுக்கும் அமைப்பான அறங்காவலர்கள் மத்திய வாரியம் (சென்ட்ரல் போர்ட் ஆப் ட்ரஸ்டீஸ்) ஒப்புதல் அளித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே