இங்கிலாந்து தலைநகரான லண்டனில் உலகத் தமிழர்களின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தான் எழுதிய அமைப்பாய் திரள்வோம் என்ற நூலை வெளியிட்டார்.
அப்போது ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தது ஏன் என்று ஒருவர் எழுப்பிய கேள்விக்கு 2009 நாடாளுமன்றத் தேர்தலின் போது விடுதலைப்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சேரலாதன் தன்னை தொலைபேசியில் அழைத்து காங்கிரசை எதிர்த்து நீங்கள் பேச பேச தமிழர்களின் மீது தான் அதிக அளவில் குண்டு விழுகிறது என்று தெரிவித்ததாக கூறிய திருமாவளவன் அதே தொலைபேசியை வாங்கி தன்னிடம் பேசிய புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் உடனடியாக காங்கிரஸ் கூட்டணியை ஆதரியுங்கள் எனக் கூறியதால் தான் அறிவாலயம் சென்று என்று திமுக காங்கிரஸ் கூட்டணியில் இணைந்ததாக திருமாவளவன் தெரிவித்தார்.
அப்போது அவர் அருகில் இருந்த இருவர் உடனடியாக எழுந்து திருமாவளவனுக்கு எதிராக கோஷமிட்டு வரவேற்பு துண்டு காகிதத்தை கிழித்து வீசினர். ஆனால் இதனை மறைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு லண்டன் தமிழர்களிடம் அவர் நிதி கேட்டதாகவும் அதனால் ஆத்திரமடைந்து அவர்கள் திருமாவளவன் மீது பணத்தை வீசியதாகவும் சமூக வலைத்தளங்களில் சிலர் தவறாக தகவல் பரப்பி வருகின்றனர்.