திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரமோற்சவம் வெகு விமரிசையுடன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி மலையப்பசாமி காலை மற்றும் இரவு வேளைகளில் பல்வேறு அவதாரங்களில் நான்கு மாட வீதிகளில் விஷேச வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
பிரமோற்சவத்தின் 3 ம் நாளான இன்று காலை மலையப்பசாமி யோக நரசிம்மர் அவதாரத்தில் சிம்ம வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.
மானிடர்கள் தங்களிடையே உள்ள விலங்களுக்குண்டான தீய எண்ணங்களை அகற்றி வாழவேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த அவதாரம் சித்தரிக்கப்படுகிறது.
இதில் செண்டை மேளம், நாதஸ்வரம் முழங்க, மும்பை டிரம்ஸ் மேள வாத்தியங்களுடன் பக்தர்களின் கோலாட்டம், மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாடவீதிகளில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவசத்துடன் கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர்.
இன்று இரவு முத்துப்பந்தல் வாகனத்தில் மலையப்ப சுவாமி தயார்களுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.