திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் தேரோட்டம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் ஆவணித்திருவிழா 20ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் முழங்க திருத்தேரினை வடம் பிடித்து சென்று தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர்.

தேரோட்டத்திற்க்காக வந்து இருந்த வெளியூர் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகமும், கோவில் நிர்வாகமும் செய்து இருந்தது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே