2014-ம் ஆண்டு நடந்து பாராளுமன்ற தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட்டதால் தான் ஒரு இடங்களை கூட வெல்ல முடியவில்லை என்று காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி கராத்தே தியாகராஜன் கூறியுள்ளளார். இது திமுக- காங்கிரஸ் கூட்டணிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கராத்தே தியாகராஜன் திமுக தனித்துப் போட்டியிட தயாரா? என்று சவால் விடுத்தார். மேலும் ‘காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கவில்லை என்றால் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக ஒரு இடங்களில் கூட வெற்றி பெற முடிந்துருக்காது’ என்றும் கூறினார்.
கராத்தே தியாகராஜன் தற்போது காங்கிரஸ் கட்சியில் எந்த ஒரு பொறுப்பில் இல்லை என்றாலும் அவர் காங்கிரசின் ஒரு மூத்த நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி காங்கிரஸின் முன்னாள் எம்எல்ஏ இதயத்துல்லா கூறும்போது ‘அவர் கட்சியில் பொறுப்பில் இருக்கும்போது இதைப்பற்றி ஏதாவது பேசினாரா தற்போது அவர் பேசுவது காங்கிரஸ் கட்சியில் அவருக்கு எந்த பொறுப்பும் வழங்கப்படவில்லை என்ற விரக்தியில் பேசிவருகிறார்’ என்று கூறினார்.
தற்போது திமுக காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் இந்த பனிப்போரால் இரண்டு கட்சிகளை சேர்ந்த தொண்டர்களும் கடும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.