திமுக இளைஞரணிக்காக புதிய APP: நவீனமயமாக்கும் முயற்சியில் உதயநிதி ஸ்டாலின்

தமிழகத்தில் மத்திய பொதுத்துறை வேலைவாய்ப்பில் தமிழருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக இளைஞர் அணி மாவட்ட மாநகர மாநில அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இளைஞர் அணியின் மாநிலச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு முதன் முறையாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் இளைஞர் அணியில் உறுப்பினராக சேர 15 முதல் 30 வயது என்ற வயது வரம்பு 18 முதல் 35 வயது என்று மாற்றம். இரண்டு மாதங்களில் 30 லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பது மூன்று மாதங்களுக்கு ஒரு மண்டல மாநாடு நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே