தாவூத் இப்ராகிம், மசூத் அசார், ஹபிஸ் மொகமது சயீத் மற்றும் லக்வி ஆகியோரை தனி நபர் பயங்கரவாதிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்டது. புதிய திருத்தத்தின் மூலம், பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்களை தனிநபர் பயங்கரவாதிகளாக அடையாளப்படுத்தப்படுத்தவும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இந்த நிலையில், ஜெய்ஸ் இ மொகமது அமைப்பின் தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தோய்பா நிறுவனர் ஹபிஸ் மொகமது சயீத், மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய தாவூத் இப்ராகிம் மற்றும் ஜாகி உர் ரஹ்மான் லக்வி ஆகியோரை தனி நபர் பயங்கரவாதிகளாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இவர்களில் மசூத் அசாருக்கு 2001ஆம் ஆண்டு நடந்த ஜம்மு காஷ்மீர் சட்டசபை தாக்குதல் மற்றும் பதான்கோட் தாக்குதல் உள்ளிட்டவற்றில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறது. தாவூத் இப்ராகிம், மும்பை தொடர் குண்டுவெடிப்பில் முக்கிய நபராக இருந்து செயல்பட்டதாக கூறப்படுகிறது.