தாகூர் மருத்துவக் கல்லூரி பெண் உதவி பேராசிரியருக்கு பாலியல் தொல்லை

காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூர் அருகே தாகூர் மருத்துவக் கல்லூரி பெண் உதவி பேராசிரியர் வீடியோ மூலம் தெரிவித்த பாலியல் புகாரை அடுத்து, கல்லூரியின் பொது மேலாளர், துணை முதல்வர் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அந்த பெண் உதவி பேராசிரியர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தாகூர் மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

அவர் முகநூல் மூலம் வெளியிட்ட வீடியோவில் கல்லூரி நிர்வாகத்தை சேர்ந்த சிலர் தன்னை தனி அறையில் அடைத்து வைத்து பாலியல் துன்புறுத்தல் செய்வதாக கூறியிருந்தார்.

தன்னை காப்பாற்றுங்கள் என்றும் தனக்கு நீதி வேண்டும் என்றும் கண்ணீருடன் அந்த வீடியோவில் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்த வீடியோ இணையத்தில் பரவியதை அடுத்து, தாகூர் மருத்துவக் கல்லூரி துணை முதல்வர் வெங்கடகிருஷ்ணன், அட்மின் லட்சுமிகாந்தன், பொது மேலாளர் சசிக்குமார், பைனான்ஸ்சியர் செந்தில்குமார், துப்புரவு பணியாளர் முனியம்மா உள்ளிட்ட 5 பேர் மீது கொலைமுயற்சி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் தாழம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே