தளர்வுகளின்றி முழு ஊரடங்கு : வெறிச்சோடி காணப்படும் சாலைகள்!

தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஆகஸ்ட் 31 ஆம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி 2 -8-2020, 9 -8-2020, 16 -8-2020 மற்றும் 23 -8-2020, 30 -8-2020 ஆகிய தேதிகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, முதல் ஞாயிறான இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் முழு ஊரடங்கு நேரத்தில் வெளியில் வருவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் சென்னையில் உள்ள சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் முழு ஊரடங்கை மக்கள் பின்பற்றி வருகின்றனர். இன்று பாலகங்கள், மருந்தகங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே