தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக ரூபா குருநாத் பொறுப்பேற்பு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவராக பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவர் சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் பொறுப்பேற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 87-வது பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா சிமெண்ட்ஸ் தலைவரும் பி.சி.சி.ஐ. முன்னாள் தலைவருமான சீனிவாசனின் மகள் ரூபா குருநாத் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

துணைத் தலைவர்களாக சீனிவாசராஜ், அசோக் சிகாமணி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட்டனர்.

இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் ரூபா குருநாத் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோல்ஃப் வீராங்கனையான ரூபா குருநாத் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராவார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே