இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளவுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களை இன்று (27.08.2019) முகாம் அலுவலகத்தில், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
வெளிநாடுகளிலிருந்து புதிய தொழில்நுட்பங்களை அறிந்து தமிழ்நாட்டில் செயல்படுத்திடவும், வெளிநாடுவாழ் தமிழர்கள் மற்றும் பிற முதலீட்டாளர்களிடமிருந்து தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்த்திடவும் , தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளிநாடு செல்லவுள்ளதாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தெரிவிக்கிறது.