தமிழகம் முழுவதும் மருத்துவ மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கி உள்ள நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜெயந்தி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டு மாணவர்களை வரவேற்று வாழ்த்தினார்.
அகில இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி நாடு முழுவதும் எம்பிபிஎஸ் படிப்புக்கு ஒரே பாடத்திட்டம் இந்த கல்வி ஆண்டு முதல் அமலாகிறது முதலாமாண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்கள் புதிய பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ பாடங்களில் உள்ள நிலையில் இது தொடர்பாக மாணவர்களுக்கு இந்த நிகழ்ச்சியில் எடுத்துக் கூறப்பட்டது பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கல்லூரி முதல்வர் ஜெயந்தி இந்த ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரி 250 இடங்களுக்கு 249 பேர் சேர்ந்துள்ளதாக கூறினார்.