தங்கம் விலை சவரனுக்கு ரூ.30 ஆயிரத்தை நெருங்குகிறது

தங்கம் விலை சவரனுக்கு முப்பதாயிரம் ரூபாய் நெருங்குவதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஆகஸ்ட் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை வரலாறு காணாத விலை ஏற்றத்திற்கு காரணமாக கூறப்பட்ட
இந்நிலையில் சென்னையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு 640 ரூபாய் அதிகரித்துள்ளது.

ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 29 ஆயிரத்து 440 ரூபாய்க்கும் கிராம் ஆபரணத் தங்கம் 3680 ரூபாய்க்கும் விற்பனையாகிறது ஆபரணத் தங்கம் ஒரு சவரன் முப்பதாயிரம் ரூபாயை வெகுவிரைவில் எட்டி விடும் வேகத்தில் உயர்ந்து வருவதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே