தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது.
கடந்த ஒரு மாத காலமாகவே கடுமையாக உயர்ந்து வந்த தங்கம் விலை பல்வேறு புதிய உச்சங்களையும் எட்டி விற்பனையானது. கடந்த புதன்கிழமை சவரன் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்நிலையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு 328 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் 29 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது.ஆபரணத்தங்கம் ஒரு கிராம் 41 ரூபாய் குறைந்து மூவாயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் 30 காசுகள் குறைந்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி ஒரு கிராம் 52 ரூபாய் 50 காசுகளுக்கு விற்பனையாகிறது. பார் வெள்ளி ஒரு கிலோ 2 ஆயிரத்து 300 ரூபாய் குறைந்து 52 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.