டெல்லி விளையாட்டு மைதானத்திற்கு அருண் ஜெட்லி பெயர் சூட்டப்பட்டது

மறைந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியின் நினைவாக அவரது பெயர் டெல்லி கிரிக்கெட் மைதானத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.

அங்குள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் பெயரை மாற்றி அருண் ஜெட்லியின் பெயரை சூட்ட டெல்லி கிரிக்கெட் சங்கம் முடிவு செய்தது. அந்த சங்கத்தின் முன்னாள் தலைவர் என்கிற முறையில் அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்த மைதானத்திற்கு அருண் ஜெட்லியின் பெயர் சூட்டப்பட்டது.

இதே போல மைதானத்தில் உள்ள ஒரு பார்வையாளர் மாடத்திற்கு இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோலியின் பெயரும் சூட்டப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, விராட்கோலி மற்றும் கிரிக்கெட் அணி வீரர்கள் உள்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே