நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வரும் நிலையில் டிசம்பர் 25ஆம் தேதி அவர்களது திருமணம் நடக்கப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் திரை உலகில் உச்ச நடிகையாக திகழ்பவர் நயன்தாரா, இவர் நீண்ட நாட்களாக இயக்குனரை காதலித்து வருவதாக கூறப்பட்டது.

இதற்கு ஏற்றார் போல் இருவரும் இணைந்து பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டது மட்டுமன்றி, தங்களது வெளிநாட்டு சுற்றுப் பயணங்களிலும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்தனர்.

இந்நிலையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்த மறுப்பு செய்தியும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே