இந்திய மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளுக்கான பணத்தை தருவதாக, இலங்கை அரசு உறுதி அளித்துள்ளது. இத்தகவலை இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி தெரிவித்துள்ளார்.
“தமிழக மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டு சேதமான மற்றும் திரும்ப எடுத்த வர முடியாத படகுகளை இலங்கையிலேயே ஏலம் விடப்பட்டு அந்த தொகையை இந்திய அரசிடம் அளிப்பதாக இலங்கை அரசு கூறியிருக்கிறது. மேலும் அந்த பணத்துடன் இந்திய அரசும் தகுந்த இழப்பீடு குடுத்து, படகுகளை இழந்த தமிழக மீனவர்களுக்கு புதிய படகுகள் வாங்குவதற்கு மத்திய அரசிடம் தான் கோரிக்கை வைத்துள்ளதாக” அவர் கூறினார்